Breaking
Mon. Dec 23rd, 2024

பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர குறுகிய கால இடைவௌியில் பினையில் விடுவிக்கப்பட்டமையானது, புதிய கின்னஸ் சாதனை என, உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

“ஹிருணிகா விரைவாக சிறை சென்று விரைவாக வௌியே வருவார்” என தான் முன்னரே கூறியதாகவும், அது தற்போது நடைபெற்றுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், பேராசிரியர் நாலக கோடஹேன பல நாட்களாக சிறையில் இருக்கையில், ஹிருணிகா குறுகிய காலத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டமை கின்னஸ் சாதனை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (11) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

சாதாரணமாக வௌ்ளிக்கிழமைகளில் எவரும் பொலிஸூக்கு செல்ல பயப்படுவர் என குறிப்பிட்ட அவர், அதற்குக் காரணம் அன்றைய தினம் மாலை 03.00 மணியைத் தாண்டினால் பல அதிகாரிகள் கடமையை நிறைவு செய்து விட்டு வீட்டுக்கு சென்று விடுவதால், பிணையில் கையெழுத்திட இருக்கமாட்டார்கள் என்பதாலேயே என அவர் தெரிவித்துள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும் ஹிருணிகா விடயத்தில் கடந்த சனிக்கிழமை ஆச்சரியமாக பதிவாளர் அலுவலகம் திறந்திருந்ததாகவும், அதிகாரிகள் பினையில் கையெழுத்திட தயாராக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(அத தெரண)

By

Related Post