Breaking
Wed. Mar 19th, 2025

இனந்தெரியாத நபர் ஒருவரை கடத்தியமை தொடர்பில் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ள ஹிருணிகாவின் வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அத்துடன், இந்த வழக்கின் முன்னேற்றமான விசாரணை அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றத்தினால் பொலிஸாருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வழக்கு விசாரணையில் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ள ஹிருணிகா உள்ளிட்ட 8 பேருக்கு எதிரான வழக்கிற்காக சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த வழக்கு விசாரணை நீதிமன்றில் இடம்பெற்ற வேளை ஹிருணிகா உள்ளிட்ட சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், நீதிபதியின் அறிவுறுத்தலுக்குப் பின்னர் மேலதிக விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் இன்று நீதிமன்றில் தெரிவித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Related Post