அஸ்ரப் ஏ சமத்
மேல்மாகணசபை உறுப்பிணர் ஹிருனிக்கா தனது தாயுடன் உடன் வெளிநாடு சென்றுள்ளார். முல்லேரியா பிரதேச சபைத் தலைவர் சோலங்க ஆராச்சி எனது தங்கை ஹிருனிக்கா எதிர்க்கட்சியில் சேர்ந்தாதல் அரசாங்கத்திலிருந்து பல இன்னல்களையும் கஸ்டங்களையும் அவருக்கு ஏற்படுத்துகின்றனர். இதனால் அவர் உடன் வெளிநாடு சென்றுள்ளார். ஆனால் அவர் சிலநாற்களின் பின் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு அவர் மீண்டும் இலங்கை வருவார்.
அத்துடன் எனது உயிருக்கும் அச்சுருத்தலாக உள்ளது. எனது வீட்டுக்கு எஸ.டி.எப். மற்றும் சீறுடை அணிந்தவர்கள் எனது பகுதியில் நடமாடுகின்றனர். எனது கட்அவுட்டை உடைத்துள்ளனர். எனவும் சோலங்க நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநட்டில் தெரிவித்தார்.