அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளராக ஜனநாயக கட்சியின் சார்பில் அமோக ஆதரவை பெற்றுள்ள ஹிலாரி கிளிண்டனுக்கு அதிபர் பராக் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தற்போது குடியரசு கட்சியை சேர்ந்த அமெரிக்க அதிபராக பொறுப்பு வகித்துவரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஹிலாரி கிளிண்டனை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, வாஷிங்டனில் உள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை விடுத்துள்ள செய்திக் குறிப்பில், ‘குழந்தைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முன்னேற்றம் தொடர்பான ஹிலாரி கிளிண்டனின் வரலாற்று சிறப்புமிக்க பிரச்சாரம் லட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கு ஊக்குசக்தியாக விளங்கும்’ என கூறப்பட்டுள்ளது.