Breaking
Mon. Dec 23rd, 2024

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில் ஹிலாரி கிளிண்டனை சாத்தான் என டிரம்ப் கடுமையாக தாக்கினார்.

வருகிற நவம்பர் 8-ந்தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். அதிகார பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அமெரிக்க அதிபர் தேர்தலில் பிரசாரம் சூடு பிடித்தது.

ஹிலாரி கிளிண்டனும், டொனால்டு டிரம்பும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் பென்சில் வேனியாவில் உள்ள ஒரு உயர்நிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது ஹிலாரி கிளிண்டனை ‘சாத்தான்’ என வர்ணித்தார். வேட்பாளர் தேர்வில் ஹிலாரி எதிராக போட்டியிட்டு கடைசி நேரத்தில் விலகிய பெர்னி காண்டர்சையும் கடுமையாக சாடினார். ‘சாத்தானுடன் அவர் உடன் படிக்கை செய்து கொண்டு போட்டியில் இருந்து விலகி அவருக்கு வழி விட்டார்’ என்றார்.

இதற்கிடையே டிரம்ப்பின் பேச்சுகளுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஈராக் போரில் மரணம் அடைந்த முஸ்லிம் ராணுவ அதிகாரியின் பெற்றோர் குறித்த டிரம்ப் பேச்சுக்கு ஜனநாயக கட்சி, குடியரசு கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குடியரசு கட்சியின் முன்னாள் வேட்பாளர் ஜான் மெக்கேனும் டிரம்புக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பிரபல வர்த்தகரும், கோடீசுவரருமான வாரன் பப்பெட் டிரம்ப் மீது கடும் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

டிரம்ப் தாக்கல் செய்த தனது வரி கணக்கை பொதுமக்களிடம் வெளியிட தயாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

By

Related Post