அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக கருத்துக் கணிப்பொன்று தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நவம்பரில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படவிருக்கின்றது. இந்தநிலையில் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளின் சார்பில் ஹிலாரி மற்றும் ட்ரம்ப்பிற்கிடையே கடுமையான போட்டித் தன்மை நிலவி வருகின்றது.
தேர்தல் பிரசாரங்கள் அனைத்து மாநிலங்களிலும் இடம்பெற்று வருகின்ற நிலையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் படி ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த கருத்துக் கணிப்பின் பிரகாரம், ஹிலாரிக்கு 52 சதவீதமான ஆதரவும் ட்ரம்புக்கு 43 சதவீதமான ஆதரவும் இருப்பது தெரியவந்துள்ளது. ஹிலாரி 9 சதவீதமான கூடுதல் ஆதரவுடன் முன்னிலையில் உள்ளார்.
இதற்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பைவிட இந்த முறை ஹிலாரி க்கான ஆதரவு 7 சதவீதம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாவது, சி.என்.என். நியூஸ் நெட்வொர்க் பொய்யான செய்திகளை வெளியிடுகிறது.
மொத்தத்தில் கிளிண்டன் நியூஸ் நெட்வொர்க் போல் தெரிகிறது. இதுபோல நியூயோர்க் டைம்ஸும் நேர்மையற்ற முறையில் செய்திகளை வெளியிட்டு வருகிறது.