Breaking
Mon. Dec 23rd, 2024

திப்­பிட்­டி­கொட, ஹுனு­பிட்­டிய மொஹி­யத்தீன் பள்­ளி­வா­சலில் இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்த அனைத்து சமயக் கட­மை­க­ளையும் இடை­யூ­றுகள் எது­வு­மின்றி நடத்­து­வ­தற்கு கட­வத்தை நீதிவான் நீதி­மன்ற நீதவான் நேற்று உத்­த­ரவு வழங்­கி­ய­துடன் கிரி­பத்­கொட பொலி­ஸினால் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த வழக்­கினை நிரா­க­ரித்தார்.

இதனால் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்த சமய கட­மை­க­ளுக்கு சட்­ட­ரீ­தி­யாக அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

ஹுனு­பிட்­டிய மொஹி­யதீன் பள்­ளி­வா­சலின் மேல்­மாடி சட்ட விரோ­த­மாக நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வ­தா­கவும் இது ஒரு மத்­ர­ஸா­வே­யன்றி பள்­ளி­வாசல் அல்ல.

அதனால் சமயக் கடை­மை­களைத் தொடர முடி­யா­தெ­னவும் இது அப்­ப­குதி மக்­களின் அமை­திக்குப் பாதிப்­பாக இருப்­ப­தா­கவும் அப்­ப­கு­தியைச் சேர்ந்த பெளத்த குருமார் ஒருவர் கிரி­பத்­கொட பொலிஸில் செய்த முறை­பாட்­டுக்­க­மைய அவ்­வ­ழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது.

முன்­னைய விசா­ர­ணை­களின் போது இது அடிப்­படை உரிமை மீறல் எனவும் ஜன­நா­யக உரிமை மீறல் எனவும் தெரி­வித்து இவ்­வா­றான ஒரு வழக்­கினை பொலி­ஸாரால் 106 ஆம் பிரிவின் கீழ் தொடர முடி­யா­தெ­னவும் பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணிகள் வாதிட்டு வந்­தனர்.

பள்­ளி­வா­சலின் மேல்­மாடி நிர்­மா­ணத்­துக்­காக வக்பு சபையின் அனு­ம­தி­யையும் புத்­த­சா­சன அமைச்சின் அனு­ம­தி­யையும் பெற்று வரும்­படி நீதி­வானால் ஏற்­க­னவே தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இது விட­யத்தில் புத்­த­சா­சன அமைச்­சுக்கு எது­வித தொடர்­பு­மில்லை எனவும் வக்பு சபையே அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நிறு­வனம் எனவும் நீதி­வா­னிடம் ஏற்­க­னவே சட்­டத்­த­ர­ணி­களால் விளக்­கப்­பட்­டது.

106 ஆம் சட்டப் பிரிவின் கீழ் இந்த வழக்கு பொலி­ஸாரால் தொட­ரப்­பட முடி­யாது என்று வாதி­டப்­பட்­ட­தை­ய­டுத்து பௌத்­த­குரு, பொலிஸ், பிர­தேச செய­லாளர் அலு­வ­லகம், பள்­ளி­வாசல் நிர்­வாகம் என்­பன ஒரு சமா­தான உடன்­ப­டிக்­கைக்கு வரும்­படி ஏற்­க­னவே நீதி­வானால் வேண்­டப்­பட்­டி­ருந்­தது.

ஆனால் பௌத்த குருவும் பொலி­ஸாரும் ஏனையத் தரப்­பு­களும், சமா­தா­னத்­திற்­காக 18 வய­துக்கு கீழா­ன­வர்கள் பள்­ளி­வா­ச­லுக்குள் செல்ல முடி­யாது, தொழுகை நடத்த முடி­யாது, பள்­ளி­வாசல் மதிலை உயர்த்­த­மு­டி­யாது, ஒலி பெருக்கி உப­யோ­கிக்க முடி­யாது என்ற நிபந்­த­னை­களை விதித்­ததால் பள்­ளி­வாசல் நிர்­வாகம் அதற்கு உடன்­ப­ட­வில்லை.

நீதிவான் ஏற்­க­னவே பள்­ளி­வாசல் பதிவு செய்­யப்­பட்­ட­மைக்­கான ஆவ­ணங்­களை கோரி அதனை முஸ்லிம் சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்தின் மூலம் உறுதி செய்­து­கொண்­ட­மையும் குறிப்பிடத்தக்கது.

பள்ளிவாசல் நிர்வாகம் வக்பு சபையில் இந்த மத்ரஸாவை பள்ளிவாசலாக பதிவு செய்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

பள்ளிவாசல் நிர்வாக சபையின் சார்பில் RRT அமைப்பின் சட்டத்தரணிகள் சிராஸ் நூர்தீன், நிராஷா கமகே, மைத்திரி குணவர்தன ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

Related Post