கல்பிட்டி விவசாயிகளுக்கான மானியம் மற்றும் பாடசாலைக் கட்டிடம், மைதான புனரமைப்பு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுத்தருமாறு ஹெக்டர் அப்புஹாமி எம்.பிக்கு கடிதம்,
அனல் மின் நிலையத்தினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் எடுத்துரைப்பு!
-ஊடகப்பிரிவு-
ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளரும், புத்தள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஹெக்டர் அபுஹாமி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் ஆகியோரிக்கிடையிலான சந்திப்பு ஹெக்ட்டர் அபுஹாமி அவர்களின் இல்லத்தில் இடம் பெற்றது.
இதன் போது ஆஷிக் அவர்களினால் “கடந்த அரசால் நிர்மானிக்கப்பட்ட அனல் மின் நிலையத்தால் தினம் தினம் புத்தளம் பகுதி மக்கள் சுகாதாரப்பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்தப்பிரச்சினைக்கான தீர்வினை நாம் மேற்கொள்ளாத சந்தர்ப்பத்தில் எதிர்க்கால எம் சந்ததியினர் உடல் குறைபாடுடையவர்களாகவும் , ஆரோக்கியமற்றவர்களாகவுமே பிறப்பார்கள், இந்த அனல் மின் நிலையத்தினால் வெளியேற்றப்படும் புகையினால் அதனை சுவாசிப்பவர்களின் ஆயுட்காலம் குறைவடைவதாகவும் ஆய்வுகள் வெளியாகியுள்ளதுடன், இதிலிருந்து வெளியேறும் தூசு துணிக்கைகளினால் அதனை அண்மித்த பிரதேசங்களில் உள்ள விவசாயங்கள் பாதிப்படைந்தும் செல்கின்றன எனவே உடனடியாக உயர்பீடங்களின் கவனத்திற்கு எத்திவைத்து இதற்கான தீர்வினை பெற்று எம் சந்ததிகளை நாம் பாதுகாக்க வேண்டும்.
அதற்காக தாங்கள் இது சம்பந்தமாக உரியவர்களிடம் பேசி அனல் மின் நிலையத்தின் பாதிப்புக்களை குறைப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்” எனவும் ஆஷிக் அவர்களால் தாழ்மையாகவும் விளக்கமாகவும் எடுத்துரைக்கப்பட்டது,
அத்தோடு அதிகம் சிரமங்களுக்கு மத்தியில் தங்கள் வாழ்வாதாரங்களை விவசாயத்தை மாத்திரம் அடிப்படையாகக்கொண்டு அதனை வாழ்க்கைச்செலவீனமாக எதிர்ப்பார்த்திருக்கும் கல்பிட்டி பிரதேசத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மானிய முறையில் நாம் உதவுவதற்கான நிதி ஒதுக்கீட்டினையும் ,
பு/ விருதோடை பாடசாலைக்கான கட்டிடம் மற்றும் முபாரக் விளையாட்டு மைதான புனரமைப்பு ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்கீட்டினையும் பொறுப்புள்ள பாராளுமன்ற உறுப்பினர் எனும் வகையில் தாங்கள் உடனடியாக பெற்றுத்தாருங்கள்.” என கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அபூஹாமி அவர்களிடத்தில் ஆஷிக் அவர்களினால் வேண்டுகோள் கடிதம் ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்து.