Breaking
Mon. Dec 23rd, 2024

ஹெம்மாதகம பகுதியில் கடந்த 06.09.2015 ம் திகதி ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்திருந்த மற்றுமத அன்பர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியில் அத்து மீறி நுழைந்து நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தி ஜமாஅத்தின் செயலாளர் சகோ. அப்துர் ராஸிக்கை தாக்க முயற்சி செய்து கொலை மிரட்டல் விடுத்து, அங்கிருந்த சகோதரர்களையும் தாக்க முயற்சி செய்து விற்பனைக்காக வைத்திருந்த மார்க்க புத்தகங்களையும் பலவந்தமாக பறித்து சென்ற பொது பல சேனா (BBS) அமைப்பினருக்கு எதிராக ஹெம்மாதகம பொலிஸ் நிலையத்தில் புகார் செய்வதற்கு சென்ற போது, தவ்ஹீத் ஜமாஅத்தின் புகாரை ஹெம்மாதகம போலிஸ் நிலையத்தில் பதிவு செய்ய மறுத்தார்கள்.

தவ்ஹீத் ஜமாத்தின் புகாரை ஏற்க்க மறுத்த பொலிஸ் அதிகாரி R.L. சனத் ரன்ஜித்கு எதிராக இன்று மனித உரிமை ஆணைக் குழுவில் தவ்ஹீத் ஜமாத் சார்பாக புகார் அளிக்கப்பட்டது.

இலங்கை அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மீறும் விதமாக குறித்த பொலிஸ் அதிகாரி நடந்துக் கொண்டதற்கு எதிராகவே இவ்வாறு புகார் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தைப் பொறுத்த வரையில் இலங்கையில் எப்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான பாதிப்புகள் நிகழ்ந்தாலும் அதற்கு எதிராக போராடத் தயங்காது என்ற வகையில் ஹெம்மாதகம பகுதியில் பொது பல சேனாவினர் செய்த அராஜகத்திற்கு எதிராகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று ஜமாத்தின் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

Related Post