Breaking
Sat. Mar 15th, 2025

ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் ரெயில் என்ஜின் தயாரிக்கப்பட்டுள்ளது.

ரெயில் என்ஜின்கள் டீசல் மற்றும் மின்சாரம் மூலம் இயக்கப்படுகிறது. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து மாற்று ஏற்பாடு செய்வதில் நிபுணர்கள் தீவிரமாக உள்ளனர்.

இந்த நிலையில் ஹைட்ரஜனில் இயங்கும் ரெயில் என்ஜினை நிபுணர்கள் தயாரித்துள்ளனர். பிரான்சை சேர்ந்த ஆல்ஸ்டம் என்ற நிறுவனம் ஹைட்ரஜனில் இயங்கும் ரெயில் என்ஜினை உருவாக்கி உள்ளது.

இந்த ரெயில் என்ஜின் வருகிற 2017-ம் ஆண்டு ஜெர்மனியில் ஓடும் ‘கொராடியா லின்ட்’ என்ற பயணிகள் ரெயிலில் பொருத்தப்பட உள்ளது.

இப்புதிய வகை ரெயில் என்ஜினில் ஹைட்ரஜன் ‘டேங்க்’ அதன் கூரை மீது அமைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து வெளியாகும் ஹைட்ரஜன் எரிவாயு செல்கள் மின்சக்தியாக மாறி ரெயில் என்ஜினை இயக்குகிறது. இதன் மூலம் ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரெயில் என்ஜினை தயாரித்த பெருமையை ஆல்ஸ்டம் நிறுவனம் பெற்றுள்ளது.

By

Related Post