ஹைபிரட் எனும் பெயரில் புதிய டெலிமெயில் சேவையை அறிமுகப்படுத்துவதற்கு தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனூடாக கூடுதலான டெலிமெயில் அனுப்பமுடியும் என்று தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்தை எதிர்காலத்தில் மேம்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.