எம்.பியும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யேஷித ராஜபக்ஷவை, கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில், அடுத்த மாதம் 16ஆம் திகதியன்று ஆஜராகும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பாணை, நேற்று வியாழக்கிழமையே விடுக்கப்பட்டது.
கல்கிஸ்ஸை மிஹிந்து மாவத்தையிலுள்ள காணியொன்றை 512 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்தமை தொடர்பில் பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அவ் வழக்குக்கு அவர், ஆஜராகததையடுத்தே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, கல்கிஸ்ஸை மேலதிக நீதவான் பிராஷா ரணசிங்க முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷ, சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள், உரிய முறையில் அறிவிப்பு கிடைக்கவில்லை என்று சுட்டிக்காட்டினர்.