Breaking
Mon. Dec 23rd, 2024

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகளாகக் கடமையாற்றிய இராணுவத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள் மூவரின் வங்கிக் கணக்குகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பேணப்படும் கணக்குகள் தொடர்பிலான அறிக்கையை, இரகசியப் பொலிஸாரிடம் கையளிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.

இந்த மூவரும் நிதி மோசடிகளில் ஈடுபட்டிருந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையிலேயே அம்மூவரினால் பேணப்பட்ட கணக்குகள் தொடர்பில் அறிக்கையிடுமாறு வங்கிகள் மற்றும் 72 நிதிநிறுவனங்களின் முகாமையாளர்களுக்கு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பணம் தூய்மையாக்கல் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு, இந்த விவரங்கள் தேவையென இரகசிய பொலிஸாரினால்,
நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்டே மேலதிக நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகளாக கடமையாற்றிய பிரிகேடியர் தமித கோமின் ரணசிங்க, கெப்டன் திஸ்ஸ விமலசேன மற்றும் மேஜர் வன்னியாராச்சிகே நெவில் ஆகியோரின் கணக்கு வழக்குகள் தொடர்பிலான விவரங்களே இவ்வாறு கோரப்பட்டுள்ளன.

By

Related Post