இலங்கையில் ஸ்மார்ட் சிற்றியை உருவாக்க 63.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை (ரூ. 9,346.6 பில்லியன்) முதலீடு செய்ய தென்கொரியா முன்வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஸ்மார்ட் சிற்றியை நிர்மாணிப்பதற்கு முதலீடு செய்வது தொடர்பான ஒப்பந்தத்தில் தென்கொரிய காணி, தென்கொரியாவின் உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சரான காங் ஹோ இன் மற்றும் இலங்கையின் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் கையெழுத்திட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்தி தெரிவித்தது.
தென்கொரியாவின் சியோல் நகரிலுள்ள ஹோட்டலில் வைத்து இந்த இருதரப்பு ஒப்பந்தம், நேற்று (24) கைச்சாத்திடப்பட்டுள்ளது.
விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு, கொழும்பின் புறநகர்ப் பகுதியான மாலபேயில் ஸ்மார்ட் சிற்றி நிர்மாணிக்கப்படவுள்ளது.