Breaking
Sat. Sep 21st, 2024

-அமைச்சின் ஊடகப்பிரிவு

இன்று 05ஆம் ஆண்டு புலமைப் பரீட்சை எழுதும் மாணவர்கள் பரீட்சையில் சித்திபெற்று பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும்; நற் பெயரை பெற்றுக்கொடுப்பதோடு எதிர்கால சமுகத்தை வழிநடத்துபவர்களாக மிளிர வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்தார்.

இப்பரீட்சையானது கல்வித்துறையில் ,ஒவ்வொரு மாணவர்களும் சந்திக்கவுள்ள  அனைத்து பரீட்சைகளுக்கும் முன் அனுபவமாகவுள்ளது. சிறுவயதில் இரவு பகலாக பரீட்சைக்கு தங்களை ஆயத்தம் செய்து ,பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் ,வெற்றி ,தோல்வி இரண்டையும் ஒரு அனுபவமாகவும் தங்களது இலக்கை நோக்கி பயணிப்பதற்கான ஆரம்பப் படியாகவும் கொள்ள வேண்டும்.

இன்று கல்வித்துறை மிகவும் வேகமாக வளர்ச்சி கண்டுள்ளது. உயர்தர பரீட்சைகளைப்போன்று தான் தற்போது மாணவர்கள் 05ஆம் ஆண்டு புலமைப் பரீட்சைக்கு ஆசிரியர்களாலும் பெற்றோர்களாலும் தயார் படுத்தப்படுகின்றனர். இதனால் இப்பரீட்சையின் பெறுபேறுகள் பாடசாலைகளின் அடைவு மட்டத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

எனவே இப்பரீட்சைக்கு தோற்றும் ஒவ்வொரு மாணவர்களும் இந்நாட்டுக்கு நற்பிரஜையாக இருப்பதோடு இச்சமுகத்தை வழிநடத்துபவர்களாகவும் சமுக சீர்திருத்தத்தைப் பற்றி சிந்திப்பவர்களாகவும் எதிர்காலத்தில் மாறவேண்டும் என அமைச்சர் தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டார்

Related Post