Breaking
Sun. Mar 16th, 2025

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் குளிர்பதன சேமிப்பு கிடங்கில் இருந்து சுமார் எட்டு ஆண்டுகள் பழமையான 03 தொன் மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டமை சம்பந்தமாக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவராக கடமையாற்றும் கடற்றொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ் பாலசுகமுனியமுக்கு அமைச்சர் இது தொடர்பில் ஆலோசனை வழங்கியுள்ளார்.

வௌிநாடொன்றில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட இந்த மீன்கள், விநியோகம் செய்யப்படாமையினால் கூட்டுத்தாபனத்திற்கு பாரியளவில் நட்டம் ஏற்படுத்தியது யார் என்று தேடிப்பார்க்குமாறு அமைச்சர் அறிவித்துள்ளார்.

யாராவது தனிப்பட்டவர்களோ அல்லது குழுக்களோ இதனுடன் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களிடம் இந்த நட்டத்தை மீள பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளதாக அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

By

Related Post