Breaking
Mon. Dec 23rd, 2024

அஸ்ரப் ஏ சமத்

விசேட அமைச்சரவையில் ஒரே ஒரு அமைச்சரவை பத்திரமே இருக்கும். அது 20வது தேர்தல் அரசியலமைப்பு சம்பந்தப்பட்டவையாகும். இன்று  எனது தலைமையில் எவ்வாறேனும் அப் பத்திரத்திரத்தை அனுமதிப்பதாகும்.

அதன் பின்னர் ஒரு வாரத்திற்குள் இந்த நாட்டில் உள்ள மக்கள் பிரதிநிதியான 225 பாராளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து அத் சீர்சிருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை தமது கையை உயர்த்தி அனுமதித்தல் வேண்டும். என இன்று கொழும்பு விகாரமாகதேவி பாக்கில் நடைபெற்ற ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சி கொழும்பு சம்மேளத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

20வது அரசியலமைப்பு தேர்தல் திருத்தத்தை அமைச்சரவையிலும், பாரளுமன்றத்திலும் ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சி முன்னெடுப்பது மறைந்த எமது கட்சித் தலைவர்கள் எஸ்.டபியு.பண்டாரநாயக்க மற்றும் சிறிமவோ பண்டாரநாயக்கவுக்கும் நாம் செய்யும் கைங்கரியமாகும். இதனை அவர் காலத்தில இருந்தே நாம் முயற்சித்தோம்.

இந்த நாட்டில் கடந்த 33வருடங்களாக தேர்தல் முறையில் விருப்பு வாக்கு முறை மாவட்ட தேர்தல் முறைகளை ஒழித்துக் கட்டி இதற்கு முடிபு கட்டவே நான் முனைகின்றேன். இதனையே எனது ஜனாதிபதி திட்டத்தில் குறிப்பிட்டு இருந்தேன்.

ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் இதனை அமுல் படுத்துவோம். இல்லாவிட்டால் நாம் ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சி ஏனைய கட்சிகள் சர்ந்தர்ப்பம் ;இருந்தும் இதனை அமுல்படுத்தா விட்டால் எதிர்கால சமுதாயத்தினர் எம்மை சாபமிடுவார்கள்.

நான் பொலநறுவை மாவட்டத்தில் 1981ஆம் ஆண்டு ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் கைச் சின்னத்தில் போட்டியிட்டேன். அப்போது எனக்கு 1 இலட்சம் ருபாவே செலவழித்து முதன் ;முதலில் பாராளுமன்றம் சென்றேன். ஆனால் அதன் பிறகு ஜே. ஆர். ஜெயவர்த்தனா கொண்டுவந்த இந்த தேர்தல் முறையினால் பணக்காரனும். காசு சம்பாதிப்பவனும், சட்டவிரோதமாக பணம் சம்பாதிப்பவனே இந்த தேர்தல் முறையினால் நன்மையடைவர் இதே மாதிரி எதிர்காலத்திலும் இவ்வாறனவர்களே பாராளுமன்றத்தில் நிரம்பிவிடுவார்கள்.

தமது பணத்தை வீசி பாராளுமன்றம் வந்திடுவார்கள். ஒருபோதும் படித்தவர்கள், மக்களுக்கு தம்மையே அர்ப்பணிக்கும் தொழிற்சங்கவாதிகள் , கல்விமாண்கள் பாராளுமன்றத்திற்கு போக முடியாமல் போகிவிடும்.

19வது சீர்திருத்தத்தை எவ்வாறு நீங்கள் பாராளுமன்றத்தில் அமுல்படுத்தினிர்களோ அவ்வாறே இதனையும் இங்கு இருக்கும் சகல ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சி எம்.பிக்களும் வாக்களியுங்கள். அத்துடன் ரணில் ;விக்கிரமசிங்க தலைமையில் உள்ள பாரளுமன்ற உறுப்பிணர்களை சேர்த்து 3-2 பங்கை கொண்டு அமுல்படுத்துங்கள்.

இத் சீர்திருத்த்தில் இந்த நாட்டில் வாழும் தமிழர். பௌத்தர் முஸ்லீம், கிரிஸ்த்தவர்கள், மலாயர் எவருக்கும் அநீதி இழைக்காமல் இது சம்பந்தப்பட்ட அரசியல் அறிஞர்கள் இதனை வரைந்துள்ளனர். சிறுபான்மையினர்க்கு அநீதி ஏற்படும் மிடத்து அவர்களுக்கு தேசிய பட்டியல் உறுப்பினர்கள் வழங்கப்படும். விருப்பு வாக்குமுறையினால் ஒவ்வொரு தேர்தலில் மாவட்டம் தோரும் வாக்குத தேடி வீன் விரயம் செய்யாது ஒரு குறிப்பிட்ட தொகுதியில் தமது சேவையை செய்யக் கூடிய வகையில் இத் தேர்தல் முறை அமைந்துள்ளது.

இதற்கு எதிராக யார் செயல்படுகின்றார்கள், இதனை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள பற்றி மக்கள் முன் பிரச்சாரப்படுத்தப்படும். என ஜனாதிபதி அங்கு உரையாற்றினார்ஃ
இந் நிகழ்வில் அமைச்சர் ராஜித்த சேனாரத்தின, பாராளுமன்ற உறுப்பிணர்கள் அனுர பிரியாதர்சன யாப்பா, டி.யு.குணசேகர, திலங்க சுமதிபால, சுசில் பிரேம் ஜயந்த ஆகியோறும் இங்கு உரையாற்றினார்கள்.

Related Post