Breaking
Wed. Dec 25th, 2024

மொஹம்மத் சனாஸ் 

எதிர்வரும் 29ம் திகதி பத்து அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க  தெரிவித்துள்ளார் . நாட்டின் நிதி நிலைமை குறித்து அறிக்கை ஒன்றை கோரியுள்ளேன்.

இது வரை காலமும் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து பொய்யான பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது.உண்மை நிலைமை குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

மக்களுக்கு மிகவும் அவசியமான பத்து பண்டங்களின் விலைகள் குறைக்கப்படும் என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சின் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related Post