Breaking
Mon. Nov 18th, 2024

ஊடாகப்பிரிவு

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரையின் பேரில் கொழும்பு 12இல் அமைந்துள்ள மொத்த வியாபார நிலையத்தில் ரூபா 10 இலட்சம் பெறுமதியான பாவனைக்குதவாத கீரி சம்பா அரிசியை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவர் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தகவலொன்றின் அடிப்படையில் அந்த வியாபார நிலையத்தை சுற்றி வளைத்த விசாரணை அதிகாரிகள் பாவனைக்குதவாத 25 கிலோ கிராம் கொண்ட 313 சாக்குகளைக் கைப்பற்றிருந்தனர். குறித்த தொகையான அரிசி 10 கிலோ கிராம், 5கிலோ கிராம் அளவு கொண்ட சாக்குகளில் அடைக்கப்பட்டிருந்ததையும் அவர்கள் கண்டு பிடித்தனர். அத்துடன் இந்த வர்த்தக நிலையத்தில் 30 வெற்றுச்சாக்குகளை கைப்பற்றியதுடன் சாக்குகளை தைப்பதற்கான இயந்திரமொன்றையும் கண்டு பிடித்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பழுதான இந்த அரிசியை தந்திரமாக புதிய சாக்குகளில் மாற்றி இந்த மோசடி வியாபாரத்தை இவர்கள் மேற்கொண்டு வந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சட்ட விரோத செயற்பாட்டில் ஈடுபட்ட குறித்த வர்த்தகர் எதிர்வரும் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாளிகாகந்தை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக தெரிவித்தார்.

பாவனைக்குதவாத பொருட்களையும் காலவாதியாகிய பண்டங்களையும் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக எந்த வித பாரபட்சமுமில்லாது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் ஹஸித திலகரத்ன தெரிவித்தார்.

 

Related Post