Breaking
Wed. Dec 25th, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் நகர சபை எல்லைக்குற்பட்ட மூர்வீதி கிராமத்திற்கான கொங்கிரீட் பாதை புனரமைப்பு வேலைகள் இன்று(2019.10.03) ஆரம்பிக்கப்பட்டது

10 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு நகர சபை உறுப்பினர் உவைஸ் அவர்களது தலைமையில் இடம்பெற்றதோடு கைத்தொழில் வர்த்தகம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் கூட்டுறவு அபிவிருத்தி திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியோக செயலாளரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர், நகரசபை உறுப்பினர் நகுசீன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் பள்ளிநிருவாகிகள் மற்றும் கிராம மக்களும் கலந்துகொண்டனர்….

Related Post