Breaking
Fri. Dec 27th, 2024
அவிசாவளையிலிருந்து ஹட்டன் வழியாக நுவரெலியா நோக்கி சென்ற முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை 4.00 மணியளவில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை கரோலினா பகுதியில் பிரதான வீதியை விலகி 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி மற்றும் பெண் ஆகிய இருவரும் படுங்காயம்பட்டு வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் பின் இருவரும் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

அவிசாவளை பகுதியில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பும் வேளையிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது. நுவரெலியா நானுஓயா பகுதியை சேர்ந்த தாய் மற்றும் மகன் ஆகிய இருவருமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

முச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

By

Related Post