Breaking
Thu. Dec 26th, 2024

மக்­க­ளுக்கு நாம் கொடுத்த வாக்­கு­று­தி­க­ளுக்கு அமைய அர­சாங்­கத்தின் நூறு நாட்கள் வேலைத்­திட்டம் முழு­மை­யாக நிறை­வ­டைந்­த­துள்ளது. கொடுத்த வாக்­கு­று­தி­களை செய்து காட்டி விட்டோம் என அர­சாங்கம் தெரி­வித்­தது.

19ஆவது திருத்தம் மட்­டுமே எஞ்­சி­யுள்ள நிலையில் அதையும் நிறை­வேற்­றி­விட்டு பொதுதேர்­த­லுக்கு செல்­வதா­கவும் குறிப்­பிட்­டது. அர­சாங்க தகவல் திணைக்­களத்தில் இடம்­ பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பின்போதே பொரு­ளா­தார அபி­வி­ருத்தி பிர­தி­ய­மைச்சர் ஹர்ஷ டி சில்வா மேற்கண்டவாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;

நாம் கொடுத்த வாக்­கு­று­தி­க­ளுக்கு அமைய நூறு நாட்கள் வேலைத்­திட்­டத்­தினை முழு­மை­யாக முடித்துவிட்டோம்.நாம் மக்­களின் வாழ்­வா­தார சுமை­யினை குறைப்­ப­தாக குறிப்­பிட்டோம்.

அதை செய்து காட்­டி­விட்டோம். இதில் விமர்­ச­னங்­க­ளுக்கு இடம்­இல்லை. அரச ஊழி­யர்­களின் சம்­பள உயர்வு ஓய்­வூ­திய நிதிக் கொடுப்­ப­னவு உயர்­வ­டைந்து விட்­டது. தனியார் துறை­யி­ன­ருக்­கான சம்­பள உயர்வு தொடர்பில் கோரிக்கை விடுத்­துள்ளோம். சமூர்த்தி வேலைத்­திட்டம் கர்ப்­பிணிப் பெண்­க­ளுக்­கான போசனை வேலைத்­திட்டம் மற்றும் அவர்­க­ளுக்­கான நிவா­ரணம் வழங்­கு­வதில் மிகப் பெரிய வெற்றி கண்­டுள்ளோம். அதே போல் அத்­தி­யா­வ­சி­யப்­பொ­ருட்­களின் விலை குறை­வ­டைந்­துள்­ளது. மக்கள் உணரும் வகையில் நிவா­ரணம் வழங்கப்பட்டுள்ளது.

எரி­பொருள் நிவா­ரணம் வழங்­கு­வ­தாக குறிப்­பிட்டோம். எரி­வாயு விலை குறைப்பு செய்­வ­தாக வாக்­கு­றுதி வழங்­கினோம். அதற்­க­மைய விலைக்­கு­றைப்பு செய்­துள்ளோம். நெல்­லுக்­கான நிர்­ணய விலை அதி­க­ரிப்பு செய்­துள்ளோம். அதேபோல் பெருந்­தோட்ட துறை நிவா­ர­ணங்­களை பெற்­றுள்­ளது. ஒரு சில இடங்­களில் தவ­றுகள் சில இடம்­பெற்­றி­ருக்க முடியும் சில விட­யங்­களில் கால தாமதம் ஏற்­பட்­டி­ருக்­கலாம் ஆனால் எமது 100 நாள் வேலைத்­திட்­டத்தில் மக்­களின் அத்­தி­யா­வ­சிய பொருட்கள் விலை குறைப்பு நிவா­ர­ணங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

வடக்கில் யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நிவா­ரணம் வழங்­கப்­பட்டு வரு­கின்­றது. இல­வச வை பை இணைய தொழில்­நுட்பம் செயற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இளைஞர் பாரா­ளு­மன்றம் பல­ம­டைந்­துள்­ளது. இவ்­வாறு பல வேலைத்­திட்­டங்கள் முழு­மை­யாக முடி­வ­டைந்து விட்­டது. வீட­மைப்பு ஒள­டத மருத்­துவ செயற்­பா­டுகள் கல்­விசார் நட­வ­டிக்­கைகள் என அனைத்தும் முழு­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அதே போல் கருத்து சுதந்­திரம் பல­ம­டைந்­து­விட்­டது. இவற்றில் சில செயற்­பா­டுகள் விடு­பட்­டி­ருக்­கலாம். ஆனால் நாம் குறிப்­பிட்­ட­தற்கு அமைய மக்­களின் வாழ்­வா­தார சுமை­யினை குறைத்து விட்டோம். நூறு நாட்­களில் அபி­வி­ருத்தி செய்ய முடி­யாது. ஆனால் மக்­க­ளுக்கு நிவா­ர­ணங்கள் மட்­டுமே வழங்க முடியும். அதை செய்து கொடுத்­துள்ளோம். இத­னூ­டாக எதிர்­வரும் காலங்­களில் அபி­வி­ருத்­தியின் பாதையில் கொண்டு செல்ல முடியும்.

இவ் விட­யத்தில் விமர்­ச­னங்கள் எழும்­பலாம் அதை ஏற்றுக் கொள்­கின்றோம். ஆனால் குறைகளை நிரூபிக்க முடியாது. பிரதமரின் திட்டத்தில் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தினை செய்து முடித்துள்ளோம். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் முழுமையாக செயற்பட்டுவிட்டது. 19 ஆவது திருத்தம் மட்டுமே எஞ்சியுள்ளது. அதையும் நிறைவேற்றிய பின்னர் பொதுத் தேர்தலுக்கு தயாராகுவோம்.

Related Post