Breaking
Fri. Nov 1st, 2024
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, அரச ஊடகங்களில் ஒன்றான சுயாதீன தொலைக்காட்சியிடம் ஆயிரம் மில்லியன் ரூபா நட்ட கோரியுள்ளார்.
தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தியில் அவதூறு பிரச்சாரம் செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சட்டத்தரணியினால் இந்த நிபந்தனைக் கடிதம், சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி நிறுவனம், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், பிரதிப் பொது முகாமையாளர் சுதர்மன் ரத்தலியகொட ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவின் தனிப்பட்ட வாழ்க்கையை இழிவுபடுத்தும் வகையில் செய்தி ஒளிபரப்புச் செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேனவிற்கு தகாத உறவு காணப்பட்டதாக குற்றம் சுமத்தி செய்தி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த டிசம்பர் மாதம் 30ம் திகதி இரவு 7 மணிக்கு இந்த செய்தி ஒளிபரப்புச் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post