Breaking
Sun. Dec 22nd, 2024

– ஊடகப் பிரிவு –

1997 ஆம் ஆண்திலிருந்து வத்தளை நகரசபை உப தலைவராகவும், 2011 ஆம் ஆண்திலிருந்து வத்தளை நகர சபை தேர்தலில் மக்களின் அதிகபடியான வாக்குகளால் தெரிவு செய்யப் பட்டு நகரசபை தலைவராக நியமிக்கப் பட்ட நான் இன்று உங்களுக்காக ஜனாதிபதி மைத்ரி தலைமையிலான UPFA வில் இன்று காலடி எடுத்து வைத்துள்ள எனக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறேன்.

மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதில் எந்த இன, மத மற்றும் மொழி பாகுபாடின்றி செயல் படுவதே எனது நோக்கமாகும். நான் பதவியில் இருந்த காலத்தில் எமது பிரதேசத்தில் எண்ணிலடங்காத அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளேன். போதைக்கு அடிமைப் பட்ட எமது பிரதேசத்து இளைஞர்களை மீட்டுள்ளேன்.

கம்பஹா மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பிரை பெறுவதென்பது வெறும் கனவாகவே உள்ளது. இந்த கனவை நாம் நனவாக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு எமது பிரதேசத்தில் ஒரு பிரதிநிதித்துவத்தை பெற்று எமது குரலை பாராளுமன்றத்தில் ஒலிக்கச் செய்ய வேண்டும். எமது பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் எடுத்துரைக்க நான் அனைவரும் கைகோர்க்க வேண்டும். ஏ.எச்.எம்.நவ்ஷாத், கம்பஹா மாவட்டம், வெற்றிலை சின்னம் இலக்கம் 17

Related Post