க.பொ.த. உயர்தர பரீட்சை மத்திய நிலையத்தில் தொழில்நுட்பவியல் பாடத்திற்கு தோற்றிய 11 மாணவர்களுக்கு இரண்டு மணித்தியாலங்கள் தாமதித்து வினாப்பத்திரம் ஒன்று வழங்கியமை தொடர்பாக 11 மாணவர்கள் வத்துகாமம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
வத்துகாமம் கல்வி வலயத்திலுள்ள கண்டி, வலல மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள க.பொ.த. உயர்தர பரீட்சை மத்திய நிலையத்தில் ஒரு அறையில் பரீட்சைக்கு சனிக்கிழமை தொழில்நுட்பவியல் பாடத்திற்கு தேற்றிய 11 மாணவர்களுக்கு இக்கேள்விப் பத்திரத்தின் இரண்டாம் பகுதியை இரண்டு மணித்தியாலங்கள் தாமதித்து வழங்கியது தொடர்பாக 11 மாணவர்கள் வத்துகாமம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
12 மணி முதல் 3.30 மணி வரை இப்பாடம் இடம்பெற்றுள்ளதுடன் பரீட்சை நிலையத்தின் ஒரு அறையில் பரீட்சைக்கு தோற்றிய 11 மாணவர்களுக்கு தொழில் நுட்பவியல் பாடத்தின் முதலாம் கேள்விப் பத்திரத்தை குறித்த நேரத்தில் வழங்கியுள்ள போதும் இரண்டாம் பகுதியை இரண்டு மணித்தியாலங்கள் தாமதித்தே வழங்கியுள்ளனர். அதுவும் மாணவர் ஒருவர் வினவிய சந்தேகத்தின் பின்பே அது வழங்கப்பட்டுள்ளது.
இவ் வினாப்பத்திரம் தாமதமாக வழங்கப்பட்டதனால் விடையளிப்பதற்கு மேலதிக காலம் வழங்கப்பட்ட போதும் அதனால் தமக்கு அநீதி ஏற்பட்டுள்ளதாகக் கூறி 11 மாணவர்களும் வத்துகாமம் பொலிஸில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளனர்.
இது தொடர்பான முறைப்பாட்டை பதிவு செய்துள்ள பொலிஸார் கல்வித் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுக்கு இது தொடர்கில் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.