Breaking
Mon. Dec 23rd, 2024

‘அடிமட்டக் களத் தேவைகள் பற்றிய மேலும் தகவல் பெறுவதற்காக, சர்வதேச தொண்டு நிறுவனங்கள்,  இலங்கையிலுள்ள 11 மாவட்டங்களிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமையிலிருந்து, விரைந்த கூட்டு கணிப்பீடுகளை ஒழுங்கு செய்திருக்கின்றன’ என ஐ.நா விளக்கமளிப்புக் கூட்டத்தின் போது  தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்ரீபன் துஜாரி, ‘கூட்டு மூலவள இணைப்பு முயற்சிகளில், உள்நாட்டு ஐ.நா ஒத்திசைவு மற்றும் உதவி நிறுவனங்களைப் பலப்படுத்த மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகமும் (OCHA) உதவிசெய்தது’ என்றார்.  ‘நேரடியாகக் களத்திலுள்ள நிலைமைக்கு ஏற்ப செயற்படுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கென, ஐக்கிய நாடுகள் தொடர்ந்தும் உதவி வழங்கும்’ என்றும் அவர் மேலும் கூறினார். இதேவேளை, இலங்கை அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் தகவல்படி, மே மாதம் 20ஆம் திகதி வரையில் 428,000 பேர், 22 மாவட்டங்களிலும் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர் என, மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிசைவாக்கான அலுவலகம் (OCHA) கூறியது.

By

Related Post