Breaking
Mon. Dec 23rd, 2024

வரும் 2022-ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் நடைபெற உள்ளது. இதுவரை இல்லாத அளவில் பிரம்மாண்டமாக நடத்த கத்தார் அரசு ஏற்பாடுகளை இப்போதிருந்தே ஆரம்பிக்க தொடங்கிவிட்டது. இந்த போட்டியை காணவரும் ரசிகர்களுக்காக மிதக்கும் ஓட்டல்களை அமைக்க பலரும் ஐடியா கொடுத்த போது முதலில் அதை நிராகரித்து விட்ட கத்தார் அரசு இப்போது மீண்டும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. அதாவது, போட்டியை காணவரும் 12 ஆயிரம் கால்பந்து ரசிகர்களுக்கும் மிதக்கும் பிரம்மாண்ட கப்பல்களில் அடைக்கலம் அளிக்க முடிவு செய்துள்ளது. இந்த ஐடியாவை அமெரிக்காவில் சென்ற வார இறுதியில் நடந்த வர்த்தக மாநாட்டின்போது வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கத்தார் நியூஸ் ஏஜென்ஸியான QTA வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு;-

கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் சர்வதேச கப்பல் ஆபரேட்டர்களுடன் நல்ல வலுவான வர்த்தக உறவுகளை மேம்படுத்தி வருகிறோம். வரும், 2022-ல் உலகக்கோப்பையின் போது பிரம்மாண்ட சொகுசுக்கப்பல்களில் ரசிகர்களை தங்க வைப்பதன் மூலம் கத்தார் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும். குறிப்பாக, குறைந்தது 6 ஆயிரம் அறைகள் கொண்ட சொகுசுக் கப்பல்களையே கத்தார் ஒப்பந்தம் செய்யும். அதில், 12 ஆயிரம் ரசிகர்களை தங்க வைக்க முடியும். இதற்காக, 200 பில்லியன் யூரோக்களை கத்தார் முதலீடு செய்ய உள்ளது.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பிபா கூட்டமைப்பு சொகுசுக்கப்பல்களில் 60 ஆயிரம் அறைகள் ரசிகர்களுக்கு இருக்க வேண்டும் என கத்தார் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதற்கு 2022-ம் ஆண்டு வரை காலஅவகாசமும் அளித்துள்ளது. அதே நேரத்தில், 1 லட்சம் அறைகளுக்கு கத்தார் உறுதியளித்துள்ளது. கடைசியாக பிரேசிலில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியை காண 10 லட்சம் ரசிகர்கள் உலகம் முழுவதிலுமிருந்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Post