சவூதி அரேபியாவில் வசிக்கும் பிரித்தானியர் ஒருவர் வீட்டில் தயாரித்த மதுவை வைத்திருந்த குற்றச்சாட்டில் 360க்கும் அதிகமான சவுக்கடிகளை எதிர்கொள்கிறார்.
கார்ல் அண்ட்ரே என்ற இந்த 74 வயதான பிரிட்டிஷ்காரரின் காரில் ஆறு ஒயின் பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலான காலமாக சிறையில் இருந்து வருகிறார்.
சவூதி அரேபியாவில் மது பாவனைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருக்கின்றன.
ஆண்ட்ரேயின் வயது மற்றும் மோசமான உடல்நிலை காரணமாக அவருக்கு இந்த கசையடி தண்டனை நிறைவேற்றப்படாது என்று சவூதி அரேபிய அதிகாரிகள் தம்மிடம் கூறியதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
ஆனால், அவர்கள் இந்த முடிவு இப்போது மறு பரீசலனை செய்யப்படுவதாக அஞ்சுகின்றனர். பிரிட்டிஷ் அரசு இவர் விரைவில் விடுதலை செய்யப்படக்கோரி வருவதாகக் கூறியிருக்கிறது.