சட்டவிரோத ஆயுதங்களை கையளிப்பதற்காக வழங்கப்பட்ட காலப் பகுதியினுள் இதுவரை 13 ஆயுதங்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜெயவீர தெரிவித்தார்.
சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைப்பதற்காக கடந்த 25ம் திகதி முதல் மே 6ம் திகதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
இக்காலப் பகுதியில் இதுவரை மாத்தளை மாவட்டத்தில் 2 ஆயுதங்களும், கம்பஹா மாவட்டத்தில் 7 ஆயுதங்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 2 ஆயுதங்களும், மொனராகலை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தலா ஒரு ஆயுதமும் கையளிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ரீ 56 ரக துப்பாக்கி ஒன்றை கையளித்தால் 25 ஆயிரம் ரூபாவும், பிஸ்டல் ஒன்றை கையளித்தால் 10 ஆயிரம் ரூபாவும், கல்கடஸ் ரக துப்பாக்கியை கையளித்தால் 5 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படுகிறது.