தனது மகளை கற்பழித்த குற்றவாளியை தந்தை விருந்துக்கு அழைத்து சித்ரவதை செய்து கொலை செய்து உள்ளார்.
இந்த சம்பவம் பற்றி கூறப்படுவதாவது:-
டெல்லியை சேர்ந்த 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது பக்கத்து வீட்டைசேர்ந்த 45 வயதுகாரரர் கற்பழித்து உள்ளார். பாதிக்கபட்ட சிறுமியிடம் இதை யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டி உள்ளார்.ஆனால் இது குறித்து அன்றைய தினமே சிறுமி தந்தையிடம் கூறி விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை நிதனாமாக திட்டம் தீட்டி உள்ளார். குற்றவாளியை இரவு விருந்துக்கு அழைத்து உள்ளார். இதை நம்பி குற்றவாளியும் விருந்து உண்ண வந்து உள்ளார்.
வயிறு முட்ட உணவு உண்டவுடன் தந்தை குற்றவாளியை அவர் உட்கார்ந்த சேரிலேயே கட்டி போட்டு உள்ளார்.பின்னர் குறடை சூடுபடுத்தி குற்றவாளியின் பிறப்புறுப்பை துண்டித்து விட்டார்.இதில் துடிதுடித்து குற்றவாளி அதே இடத்தில் பலியானார்.பின்னர் காவல் நிலையம் சென்ற அவர் குற்றத்தை ஒப்புகொண்டு சரண் அடைந்து உள்ளார். போலீசார் அவர்மீது கொலைவழக்கு பதிவு செய்து உள்ளனர்