Breaking
Mon. Dec 23rd, 2024

– அஸ்ரப் ஏ சமத் –

கொழும்பினை அழகுபடுத்துதல் என்ற போர்வையில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கடந்த காலங்களில் நிர்மாணிக்கப்பட்ட சில திட்டங்கள் முற்று முழுதாக பராமரிக்க முடியாத நிலையில் உள்ளது. இதற்காக பாரிய நிதி வீனடிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களை நகர அபிவிருத்தி அதிகார சபையினால் பாரிய நிதிகள் மோசடியாக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் நகர அபிவிருத்தி சகல கட்டுமான திட்டங்களும் முறையான பொறியியல் திட்டமிடாமலும் தனிப்பட்டவர்களுக்கு கட்டுமான ஒப்பந்தமும் வழங்கப்பட்டுள்ளன. இனி வரும் காலத்தில் இவ்வாறான முறைகேடுகள் நடைபெறமாட்டாது. சகல கட்டுமான முறைகள் உரிய அரச டென்டர் முறை கோரப்பட்டே நகர அபிவிருத்தி நிர்மானப்பணிகள் வழங்கப்படும். என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இன்று (5) உலக குடியிருப்பு தினத்தின் தேசிய பைவபவம் மாளிகாவத்தையில் உள்ள பிரதீபா மண்டபத்தில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் மாநகர சபைகள் அபிவிருத்தி அமைச்சர் ;பாட்டலி சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் அங்கு தெரிவித்தாவது-

கொழும்பில் மூன்று பாரிய திட்டங்களை எனது அமைச்சு நடைமுறைப்படுத்த உள்ளது. அத்திட்டத்தில் கொழும்பு துறைமுக பொருளாதார நகரம், மாலபே தொழில்நுட்ப நகரம், கட்டுநாயக்க விமான நிலைய நகரம் என பிரிக்கப்பட்டு அபிவிருத்திகள் செய்யப்பட உள்ளன. இத்திட்டத்தினால் பொருளாதாரம், வீடமைப்பு, தொழில் சந்தைகள் பெற சர்ந்தர்;ப்பங்களும் கிடைக்கும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்கக தெரிவித்தார்.

கொழும்பு மாநகர பிரதேசத்தில் 66ஆயிரம் குடும்பங்கள் சேரிகளிலும் மூலை, முடுக்குகளில் வாழ்க்கைக்கு பொருத்தமற்ற வீடுகளிலும் வாழந்து வருகின்றார்கள்;. இம் மக்களது வீட்டுப் பிரச்சினையை தீர்ப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையும் வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சும் இணைந்து கொழும்பில் புதிய வீடமைப்புத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

ஏற்கனவே நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட தொடர்மாடி வீடமைப்புத்திட்டங்களில் 5ஆயிரம் வீடுகள் நிர்மானிக்கப்பட்டு முடிவடைந்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் 10ஆயிரம் வீடுகள் நிர்மான வேலைகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த டிசம்பர் 31ஆம் திகதிக்குள் ;இவ் வீடுகள் பகிhந்தளிக்கப்படும். அடுத்த 5ஆண்டுகளுக்குள் கொழும்பில் ;மேலும் 15ஆயிரம் தொடர்மாடி வீடுகள் நிர்மானிக்கப்படும்.

By

Related Post