Breaking
Sun. Dec 22nd, 2024

இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ்

இலங்கையில்  முஸ்லிம் சமூகத்தின் கல்வி மேம்பாடு தொடர்பில் அதிக கவனத்தை செலுத்த உள்ளதாகவும், அதற்கான திட்டமொன்றினை எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் முதல் கட்டமாக 15 மாவட்டங்களை உள்ளிடக்கியதாக ஜந்தாண்டு திட்டமொன்றினை நடை முறைப்படுத்தவுள்ளதாக கூறினார்.

புத்தளம் தில்லையடி உமராபாத் அன்சார் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் இன்று (2015.06.01) இடம் பெற்ற ஜந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில்  சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பாடசாலை அதிபர்.ஏ.எச்.ஏ.வதுாத் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் யாழ் மாநாகர சபை உறுப்பினர் எம்.அஸ்கர்  ரூமி,அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின்  நிறைவேற்று பணிப்பாளர் எஜ்.எல்.டீன்,பொறியியலாளர் எம்.யாசீன்,ஹிரா அமைப்பின் தலைவரும்.தொழிலதிபருமான தேசமான்யு அமீன் உட்பட பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர். இங்கு மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் உரைாயற்றுகையில் கூறியதாவது –

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாங்கள் கல்வி தொடர்பான ஆய்வினை செய்தோம்.அந்த வகையில பொறியியலாளர்கள் மூன்றரை சதவீதமானவர்கள்இருக்கின்றனர்.வைத்தியர்கள் 4 சதவீதமாக காணப்படுகின்றனர்.ஏனைய துறைகளில் நாம் குறைந்த நிலையில் இருக்கின்றோம்.இந்த நிலை இன்னும் 10 வருடங்களில் இதனை விட மகிவும் பின்னடைவுக்கு சென்றுவிடக் கூடிய அபாயம் காணப்படுவதாக அறிகின்றோம்.எனவே இதிலிருந்து எமது சமூகத்திற்கான விமோசனத்தை பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது.மஸ்லிம் சமூகத்தின் கல்வி நிலையினை 10 சதவீதத்துக்கு உயர்த்த வேண்டியுள்ளது.

அதே பொல் இந்த நாட்டில் வாழும் ஏனைய பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகங்களுடன் சமத்துவமான கல்வி நிலைக்கு கொண்டுவரும் வேலைத்திட்டங்களை நாம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.இதனை கவனத்தில் கொண்டு எமது கட்சியின் ஊடாக கல்விக்கான கட்டமைப்பு ஒன்றினை ஏற்படுத்தியுள்ளேன்.அதனுாடாக இந்த சமூகப்பணியினை முன்னெடுக்கவுள்ளோம்.கடந்த காலத்தில் இவ்வாறான திட்டமிடப்பட்ட கல்வி மே்பாடு செயற்திட்டங்களின் வேகம் மிகவும் குறைந்து காணப்பட்டதால் தான் கல்வியில் முன்னேற்ற நிலையினை காணமுடியாதுள்ளது.

இந்த சமூக மேம்பாட்டுக்காக கட்சி அரசியல் மற்றும் பட்டங்கள் என்பவற்றுக்கு அப்பால் எம்மால் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்திற்கு உங்களால் ஆன சகல உதவிகளையும் எமக்கு வழங்குங்கள் அதனை நாம் மனமுயர்ந்து ஏற்றுக் கொள்ள தாயராகவுள்ளோம் என்ற அழைப்பினை வடக்கிலிருந்த வெளியேற்றப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகள் கல்வி கற்கும் இந்த பாடசாலையில் இருந்து விடுக்கின்றேன்.

அண்யைமக் காலமாக முஸ்லிம்களத மீள்குடியேற்றத்திற்கு எதிரான சதிகள் இடம் பெறுகின்றது.யாழ்ப்பானத்தில் மீள்குடியேற்றத்திற்காக சென்ற 2700 குடும்பங்களில் 2000 குடும்பங்கள் அங்கு வாழ்வதற்கான வசதிகளின்றி மீண்டும் புத்தளத்திற்கும் ஏனைய பிரதேசங்களுக்கும் சென்றுள்ளார்கள்.அது போல் கிளிநொச்சிக்கு சென்ற 900 குடும்பங்களில் 500 குடும்பங்கள் மீள இடம் பெயர்ந்த பிரதேசங்களுக்கு சென்றுவிட்டார்கள்.முல்லைத்தீவிலும்,மன்னாரிலம் இதே நிலையே காணப்படுகின்றது.இந்த மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று நாம் முயன்றால் அதற்கு பல தரப்புக்கள் தடைகளை போடுகின்றார்கள்.
1990 ஆம் ஆண்டு எமது மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டு புத்தளம் வந்த போது இந்த மக்கள் எமக்கு எதையெல்லாம் செய்ய வேண்டமோ அதனை செய்தார்கள்.இஅவர்களை எப்பொதும் நாம் மறக்க முடியாது.தொடர்ந்தும் அவர்களுக்கு பாரமாக நாங்கள் இருந்தவிடக் கூடாது என்பதால் மீண்டும் தமத மண்ணுக்கு மீள்குடியேற செல்கின்ற போது அங்கும் இடைஞ்சல்களை செய்கின்றனர்.சவால்களும்,சதிகளும் காட்டிக் கொடுப்புக்களும் இன்று காட்டுதர்பார் ஆட்சி செய்கின்றது.சில ஊடகங்கள் இந்த இனவாதத்துக்கு தீனிபோடுவதை காணுகின்றோம் இந்த சவால்களை வெற்றிக்கொள்ள நாம் அனைவரம் எல்லா சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனைகளை செய்ய வேண்டும்.

கடும் போக்கு சிங்கள இனவாத சக்திகள் கடந்த காலத்தில் எமது சமூகத்திற்கு எதிராக மேற்கொண்ட சதிகளின் போது எமது உயிரையும் துச்சமென மதித்து வன்னி மக்கள் எமக்கு தந்த வாக்கினை வைத்து போராடினோம்,குர்ஆனை அவமதித்த போது,எனது அமைச்சுக்குள் அடாடித்தனம் செய்த சந்தர்ப்பங்களில் பலர் அமைதியாக இருந்த போது அந்த கடும் போக்கு சக்திகளுக்கு எதிராக துணிந்து நீதிமன்றத்தை நாடினோம்.

இவையெல்லாம் எவரிடமும் நன்றியினை எதிர் பார்த்து செய்கின்ற விடயமல்ல.எவரது நன்றிக்காக எதையும் நாம் செய்ய முட்பட்டோமெனில் ஒரு அடியினைக் கூட எம்மால் கடக்க முடியாது என கூறிய அமைச்சர் றிசாத் பதியுதீன் மாணவ சமூகத்தின் கல்வி வளர்ச்சியின் மூலம் எமது சமூகத்திற்கான முத்துக்களை அடையாளப்படுத்த முடியும் என்றும் கூறினார்.

Related Post