Breaking
Mon. Mar 17th, 2025
இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற மகாத்மா காந்தி புலமைப் பரிசில் திட்டம், இந்த ஆண்டு இலங்கையில் 150 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 25 மாவட்டங்களுக்கும் இந்த எண்ணிக்கையான புலமை பரிசில்கள் பகிரப்பட்டுள்ளன.
பத்ரமுல்லை கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விழாவில் இந்த உதவித் தொகையை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, உயர்நிலை கல்வி மாணவர்களுக்கே இந்த உதவித் தொகை வழங்கப்படுவதுடன் மாதாந்தம் 2000 ரூபா முதல் 2500 வரையில் உதவித் தொகை வழங்கி வருவதாகவும் இந்திய தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post