சட்டவிரோத ஆயுதங்களை அரசாங்கத்திடம் கையளிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை 155 ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சட்டவிரோத ஆயுதங்களை அரசாங்கத்திடம் கையளிக்கும் நடவடிக்கை கடந்த மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் மே 6 ஆம் திகதி முடிவடைகிறது.
இக்காலத்தினுள் கையளிக்கப்படும் ஆயுதம் தொடர்பில் எவ்வித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படமாட்டாது எனவும் ஆயுதங்களை கையளிப்பவர்களுக்கு அவற்றின் வகைகளுக்கு ஏற்ப பணத்தொகை வழக்கப்படுவதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், எதிர்வரும் மே 6 ஆம் திகதியின் பின்னர் நாடளாவிய ரீதியில் சட்டவிரோத ஆயுதங்களை தேடி விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.