Breaking
Tue. Dec 24th, 2024
இந்தோனேசியாவின் சுரயபோ நகரத்திலிருந்து சிங்கப்பூரிற்கு 161 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த எயர்ஏசியா விமாசேவைக்கு சொந்தமான ஏ320-200 விமானமொன்று காணமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட விமானத்துடனான தொடர்புகள் இன்று 28-12-2014 காலை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், விமானத்தை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுரபாயோவிற்கும், சிங்கப்பூரிற்கும் இடையிலான ஜாவா கடற்பகுதிக்கு மேலாகவே குறிப்பிட்ட விமானம் காணமற்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட விமானம் காணமல்போவதற்கு முன்னர் வழமைக்கு மாறான பாதையில் பயணிப்பதற்கான அனுமதியை கோரியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
2
மாயமான ஏர் ஏசியா விமானத்தில் 155 பயணிகள் பயணம் செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
காலை 8 மணிக்கு சிங்கப்பூர் சென்றடைய வேண்டிய விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Post