Breaking
Sun. Dec 22nd, 2024

தாய்லாந்து ரோயல் ஆயுதப்படைகளுக்கான பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சொம்மை காவ்டிரா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோரை நேற்று (27) பாதுகாப்பு அமைச்சில் வைத்து சந்தித்தார்.

ஜெனரல் சொம்மை காவ்டிரா, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற வெவ்வேறு சந்திப்புகளின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வை நினைவுகூறும் வகையில் ஜெனரல் சொம்மை காவ்டிரா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறி கொண்டனர். இந்நிகழ்வின்போது, பாதுகாப்பு படைகளின் பிரதானி எயர் சீப் மார்ஷல் கேஏ குணதிலகவும் கலந்து கொண்டார்.

Chief_of_Defence_Forces_of_Royal_Thai_Armed_Forces_meets_State_Minister_and_Secretary_20160427_06p4

By

Related Post