18ம் திருத்தச் சட்டத்தில் பாரிய பிழைகள் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கு சிறப்பு தேர்ச்சி அவசியம்.இந்த தேர்ச்சி இல்லாத பட்சத்தில் அரசியல் அமைப்பை உருவாக்க முடியாது.
தற்போது அதுதான் நடந்திருக்கிறது. 18ம் திருத்தச்சட்டம் தயாரிக்கப்படும் போது பல்வேறு எதிர்பார்ப்புகள் காணப்பட்டன.
எனினும் அவற்றில் குழப்ப நிலை உருவாகி இருக்கிறது. இந்த குழப்ப நிலைகள்; விரைவில் வெளியில் வரும் என்று ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.