Breaking
Sun. Dec 22nd, 2024

குச்சவெளி, தம்பலகாமம், மூதூர் ஆகிய பிரதேசங்களில் உள்ள 18 முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இன்று (27/03/2016) இரவு இணைந்துகொண்டனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த இந்த உறுப்பினர்கள், இன்று இரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் முன்னிலையில் கட்சியில் இணைந்துகொண்டு, கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்தும் பாடுபடப் போவதாகப் பகிரங்கமாக அறிவித்தனர்.

கிண்ணியா, பொது மைதானத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொதுக்கூட்டம் நடைபெற்ற போதே இந்த நிகழ்வு இடம்பெற்றது.

கடந்த காலங்களில் தாம் அங்கம் வகித்த கட்சிகளால் மக்களுக்கு எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை எனவும், அமைச்சர் றிசாத்தை ஒரு செயல்திறன் உள்ள, துடிப்பு வாய்ந்த மக்கள் சேவகனாக தாம் இனங்கண்டதனாலேயே, இந்த முடிவை அறிவித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டவர்களுள், சிங்கள சகோதரர்களும் அடங்குவது குறிப்பிடத்தக்கது.

ri5.jpg2_5.jpg3_5

ri7

ri61

By

Related Post