Breaking
Thu. Jan 16th, 2025

பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலக்கம் 476, ஹிழுறியா ஜும்மா பள்ளிவாயல் வீதி, மஞ்சந்தொடுவாய், மட்டக்களப்பு எனும் முகவரியில் வசிக்கும் றவூப் முஹம்மட் சியாம் (வயது 18) எனும் முஸ்லிம் இளைஞனை கடந்த 19.09.2014 திகதி தொடக்கம் இன்று வரை காணவில்லை என அவரின் தந்தை இப்றாஹீம் றவூப் தெரிவித்தார்.

தனது மகன் முஹம்மட் சியாமை காணவில்லை என காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் 20.09.2014ம் திகதி முறைபாப்பாடு செய்ததாகவும், அவரை கண்டவர்கள் 0779344130 எனும் எனது தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு விடுக்குமாறும் அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் அவரின் தந்தை பொது மக்களை வேண்டிக்கொள்கின்றார்.

1997.03.30ம் திகதி பிறந்த முஹம்மட் சியாம் காத்தான்குடி தேசியப் பாடசாலையின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பிரிவு ஐ.சி.டி மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 13 தினங்களாக காணாமல் போயுள்ள குறித்த முஸ்லிம் இளைஞனின் தேசிய அடையாள அட்டை இலக்கம் 970903330v என்பதும் மேலும் குறிப்பிடத்தக்கது.

Related Post