Breaking
Mon. Dec 23rd, 2024

1875ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரை வௌியிடப்பட்ட முத்திரைகள் பெயர்பட்டியலை தொகுத்து-  மூன்று பகுதிகளாக வௌியிட தபால் திணைக்களத்தின் முத்திரை வௌியீட்டு காரியாலயம் நடவடிக்ைக மேற்கொண்டுள்ளது.

அதற்கமைய குறித்த காலப்பகுதியில் வௌியிடப்பட்ட அனைத்து முத்திரைகளின் புகைப்படங்களும் அவற்றுக்கான தொழில்நுட்ப தகவல்களும் இத்தொகுப்பில் வௌியிடப்படவுள்ளன.

தேசிய மற்றும் சர்வதேச முத்திரை  ​சேகரிப்பாளர்களுக்கு இலங்கையில் வௌியிடப்பட்ட முத்திரைகள் தொடர்பான தௌிவான தகவல்களை பெற்றுக்ெகாள்ளும் நோக்கிலும் பாடசாலை நூலகங்களுக்கு பயனளிக்கும் நோக்கிலும் இந்த முத்திரை தகவல் அடங்கிய குறித்த தொகுப்புகள்  வௌியிடப்படவுள்ளன.

இதில்  1949-1999 வரையான காலப்பகுதியில் வௌியிட்ட முத்திரைகள் அடங்கிய இரண்டாவது இதல் 3000.00 ரூபாவுக்கும் 2000-2014 வரையான காலப்பகுதியில் வௌியிட்ட முத்திரைகளின் தகவல்கள் அடங்கிய தொகுப்பு 2500.00 விற்பனை செய்யப்படவுள்ளன.

கொழும்பு 10 தபால் தலைமையகம் மற்றும் கொழும்பு முத்திரை காரியாலயம் என்பவற்றில் இவை விற்பனை செய்யப்படவுள்ளன.

மேலதிக தகவல்களை 0112 326 163 அல்லது 0114 927 248 ஆகிய தொலைபேசி இலக்கங்களினூடாக  தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

Related Post