Breaking
Mon. Dec 23rd, 2024

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர்  நிறைவேற்றப்பட்டது.

இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின்போது இதற்கு ஆதரவாக 215 வாக்குகளும்எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன.

ஒரு உறுப்பினர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

எதிராக வாக்களித்தவர் சரத்வீரசேகர எம்பியாக இருக்கலாம் என்று பாராளுமன்ற வட்டார தகவல்கள் தெரிவிப்பதாக எமது கொழும்பு செய்தியாளர் குறிபிட்டார்.

இன்றைய வாக்கெடுப்பின் போது ஜானக பண்டார, ஜகத் பாலசூரிய, எல்லாவல மேதானந்த தேரர், கெஹலிய ரம்புக்வெல்ல, பசில் ராஜபக்‌ஷ, விநாயகமூர்த்தி, பிரேமலால் ஜயசேகர ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை.

Related Post