பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19ஆவது திருத்தச் சட்டத்தினை நிறைவேற்றக் கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணியினால் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிடின் அரசுக்கு எதிராக போராடவும் மக்கள் விடுதலை முன்னணி தயாராகி வருவதாகவும் தெரிவிக்கின்றது.
ஜனாதிபதி முறைமையினை நீக்கி அதிகார பரவலாக்கம் 19ஆவது திருத்தச் சட் டம் நிறைவேற்றுவதில் இழுபறி நிலைமை எழுந்துள்ள நிலையில் அடுத்த பாராளுமன்ற அமர்வில் 19ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரி மக்கள் விடுதலை முன்னணியினால் இன்று மக்கள் ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடை பெறவுள்ளது. நான்கு மணிக்கு இடம்பெறவுள்ள இவ் ஆர்ப்பாட்டத்தில் 19ஆவது திருத்தம் உடனடி யாக நிறைவேற்றப்படாவிடின் அரசாங்கத்திற்கு எதிராக மக்களை ஒன்றிணைத்து 19ஆவது திருத்தத்தினை நிறைவேற்றக்கோரி போராடவுள்ளதாகவும் அதற்கு தாம் தயாராகவே உள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட் டுள்ளது. VK