Breaking
Wed. Jan 15th, 2025

அரசாங்கத்தின் 19வது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்திலே அதிகூடிய விருப்புவாக்குகளால் நிறைவேற்றப்படும் என்று சமுர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

அரசாங்கத்தின் நூறு நாள் விஷேட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் வீட்டுக்கு வீடு கிராமத்திற்கு கிராமம் என்ற தொனிப் பொருளில் கிராமங்களை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தில் இன்று (26) செம்மண்னோடை மௌலானா குறுக்கு வீதியில் அமைந்துள்ள வடிகானுக்கு மூடியிடும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலே மக்கள் ஆணையைப் பெற்றது அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்கின்ற திட்டத்தை முன்வைத்துத்தான் அத்திட்டம் எதிர்வரும் தினங்களிலே பாராளுமன்த்திலே நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

இலங்கை வரலாற்றிலே எந்தவொரு ஜனாதிபதியும் அதிகாரத்தில் இருக்கின்ற போது தனது பதவியின் அதிகாரங்களை குறைக்க வேண்டும் என்று கூறிய வரலாறு கிடையாது ஆனால் வரலாற்றில் முதற்தடவையாக இப்போது இருக்கின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனது அதிகாரத்தை குறைக்கச் சொல்லி பாராளுமன்றத்திலே கேட்டு இருப்பது இலங்கையில் மாத்திரம் அல்ல உலகத்திலயே பொண் எழுத்துக்கலாள் பொறிக்கப்பட வேண்டிய விடயம் என்று தெரிவித்தார்.

சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் வீட்டுக்கு வீடு கிராமத்திற்கு கிராமம் என்ற வேலைத்திட்டத்திற்கு ஒரு திட்டத்திற்கு பத்து லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதில் மக்களின் பங்களிப்பு இரண்டு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாவுடன் இவ் வடிகானுக்கு மூடியிடப்படவுள்ளதாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எச்.அறபாத் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபர், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.றுவைத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பிரதி அமைச்சரின் முயற்சியினால் செம்மண்னோடை கிராமத்திற்கு மேலதிகமா மைதான புணரமைப்புக்கு பத்து லட்சம ரூபாவும் மூடியிடப்படாமல் உள்ள மீதி வடிகான்களுக்கு மூடியிடுவதற்கு இருபது லட்சம் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

Related Post