Breaking
Thu. Oct 31st, 2024

19வது அரசியல் யாப்புத் திருத்த யோசனை தொடர்பில் பாராளுமன்றில் விவாதம் நடத்துவது குறித்து ஆராய விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இன்று (09) காலை 10 மணியளவில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதன்போது 19வது திருத்தச் சட்டம் குறித்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சபாநாயகர் கட்சித் தலைவர்களுக்கு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் முடிவில் 19வது திருத்தம் குறித்து பாராளுமன்றில் விவாதம் நடத்துவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post