Breaking
Mon. Dec 23rd, 2024

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு வழங்காத அரசியல்வாதிகள் மக்களுக்கு துரோகம் இழைத்தவர்களாக வரலாற்றில் இணைந்துவிடுவார்கள் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உயர் நீதிமன்றம் வழங்கிய தீரப்பிற்கு அமைவாக முன்வைக்கப்ட்டுள்ள 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஜனநாயகமானது. ஜனாதிபதி பதவியை ஜனநாயகமாக்கும் 19 ஆவது அரசியலமைப்பை நிறைவேற்றுவது அனைவரினதும் கடமையாகும். இதற்கு ஜாதிக ஹெல உறுமய ஆரவு வழங்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதாக தெரிவித்து எம்மை பலரும் சாடினார்கள். இதனை சீர்குழைக்க முற்படுவதாகவும் கூறினார்கள். ஆனால் வரலாறு மீண்டும் உண்மையை வெளிப்படுத்தி இதனை செய்ய முடியும் என வெளிப்படுத்தியுள்ளது. இதற்கு தடையாக இருப்பவர்கள் மக்கள் துரோகிகளாவார்கள். அதேபோன்று இது மிகவும் பொன்னான சந்தர்ப்பத்தை கைநழுவ விட்டதாக வரலாற்றில் அவர்கள் இணைவார்கள். மக்கள் இதனை பாரத்து கொள்வார்கள்.

Related Post