19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று (28) பிற்பகல் நடைபெறவுள்ளது.இந்த திருத்தச் சட்டமூலம் ஜனாதிபதியால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து விவாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இன்று (28) முற்பகல் 9 மணிக்கு மீண்டும் விவாதம் தொடரவுள்ளதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். விவாதம் நிறைவுபெற்றதும் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பும், குழுநிலை விவாதம் மீதான வாக்கெடுப்பும், நடத்தப்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்
குழுநிலை விவாதம் நிறைவில் நடத்தப்படுகின்ற வாக்கெடுப்பு ஒரு சில வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்ற முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் இரண்டாம் வாசிப்பு மற்றும் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது பிரசன்னமாகாத பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்களாக மூன்றில் இரண்டு பெறும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டியது கட்டாயம் என பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.