இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் சுமார் 3000
முறைப்பாடுகள் விசாரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சிங்கள வார இதழொன்று
சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த முறைப்பாடுகள் சுமார் 19 வருட காலமாக விசாரிக்கப்படாமல் இவ்வாறு கிடப்பில்
போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளுக்கு போதியளவான அதிகாரிகள் நியமிக்கப்படாமையே இதற்கு காரணமென
குறிப்பிடப்படுகின்றது. இதனால் முறைப்பாட்டாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில், விரைவில் ஒப்பந்த அடிப்படையிலான அதிகாரிகளையாவது நியமித்து தேங்கிக் கிடக்கும்
முறைப்பாடுகளை விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென மனித உரிமை ஆணைக்குழுவின்
ஆணையாளர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.