Breaking
Sun. Dec 22nd, 2024

முத்தையா முரளிதரன் இலங்கை நாட்டின் சிறந்த மகன். அவர் தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ள தேவையில்லையென இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும் விக்கட் காப்பாளருமான குமார் சங்கக்கார தமது உத்தியோகபூா்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

முரளிக்கு தன் நாட்டின் மீது அன்புள்ளது, மேலும் அவர் யாருக்கு வேண்டுமானாலும் ஆலோசகராக அல்லது பயிற்சியாளராகவும் செயற்படலாம்.

இலங்கை கிரிக்கெட் சபை முரளியிடம் பயிற்சியளிக்க இதுவரையும் கேட்டுக்கொண்டதில்லை. தனது நாட்டிற்காக தனது முழு திறமையினையும் வெளிபடுத்தியுள்ளவர். நாட்டிற்காக செயற்பட எப்போதும் தயாராகவே உள்ளார். இலங்கை கிரிக்கெட் சபையே முரளியிடம்  கேட்க வேண்டும்.

2016-07-26_at_12-16-37

நாங்கள் அவரை நினைத்து கட்டாயம் பெருமைபட வேண்டும். எந்தவொரு சுழற்பந்துவீச்சாளரும் பந்துவீச்சு தொடர்பில் ஆலோசனை  கேட்க வந்தால் முரளியே முதலாவதாக சென்று இலவசமாக நீண்ட நேரம் அவர்களுக்கான உதவிகளை வழங்குபவர்.

முக்கிய பிரச்சினைகள் ஏதும்  முரளியுடன் இலங்கை கிரிக்கெட் சபைக்கு இருப்பின் அதை நிவர்த்தி செய்துக்கொள்ள இதுவே சரியான தருணம் என சங்கா தெரிவித்துள்ளார்.

முரளிதரன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பந்துவீச்சி ஆலோசகராக செயற்படுவது குறித்து கடந்த ஞாயிற்கிழமை இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமத்திபால வெளியிட்ட கருத்து தொடர்பில் குமார் சங்கக்கார தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

2016-07-26_at_12-17-21

By

Related Post