Breaking
Mon. Dec 23rd, 2024

ரயிலில் இரண்டாம் வகுப்பில் பயணித்த 52 பயணிகளை கைதுசெய்துள்ளதாக ரயில் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. 3 ஆம் வகுப்புக்கான பயணச்சீட்டை பெற்றுகொண்டு 2ஆம் வகுப்பில் பயணித்த 52 பயணிகளை கைது செய்துள்ளதாகவும் அவர்களிடமிருந்து ஒரு இலட்சத்து 34ஆயிரத்து 210ரூபாவை தண்டமாக அறவிட்டுள்ளதாகவும் ரயில் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. மருதானை- மாத்தறை மற்றும் பொல்ஹாவலை-கல்கிஸ்ஸ ஆகிய ரயில்களில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று அப்பிரிவு அறிவித்துள்ளது.

Related Post