Breaking
Sun. Dec 22nd, 2024

2.2 அடி நீள­மான பாரிய முத்து ஒன்றை பிலிப்­பைன்ஸைச் சேர்ந்த மீனவர் ஒருவர் வைத்­தி­ருக்­கிறார். இது, உலகில் இது­வரை கண்­டு­பி­டிக்­கப்­பட்ட மிகப் பெரிய முத்து எனக் கரு­தப்­ப­டு­கி­றது.

பிலிப்­பைன்ஸின் பலவான் தீவின் கடற்­க­ரை­யொன்றில் 10 வரு­டங்­க­ளுக்கு முன்னர் மேற்­படி மீனவர் இந்த முத்தை கண்­டெ­டுத்தார். இதன் பெறு­மதி சுமார் 10 கோடி அமெ­ரிக்க டொலர்கள் (சுமார் 1,546 ரூபா) எனக் கரு­தப்­ப­டு­கி­றது. எனினும், மேற்­படி மீனவர் இந்த முத்தின் பெறு­ம­தியை உண­ர­வில்லை. இம் ­முத்தை தனது அதிஷ்டப் பொரு­ளாகக் கருதி தனது கட்­டி­லுக்கு கீழ் இதை வைத்­தி­ருந்தார்

அவரின் பல­கை­யி­னா­லான வீடு இவ்­ வ­ருட முற்­ப­கு­தியில் தீக்­கி­ரை­யான பின்னர் அவர் வேறிடம் செல்ல வேண்டி ஏற்­பட்­டது. அப்­போது பலவான் தீவின் புவர்ட்டோ பிரின்­செஸ்கா நக­ரி­லுள்ள சுற்­று­லாத்­துறை அதி­காரி ஒரு­வ­ரிடம் அவர் இந்த முத்தை காண்­பித்தார்.

அதை­ய­டுத்தே இந்த பாரிய முத்து தொடர்­பான விப­ரங்கள் தெரி­ய­வந்­தன.
2.2 அடி நீளத்­தையும் 1 அடி அக­லத்­தையும் கொண்ட  இந்த முத்தின் எடை 34 கிலோ­கிராம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இதற்­குமுன் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டி­ருந்த உலகின் மிகப் பெரிய முத்­தை­விட 5 மடங்கு பெரி­தா­ன­தாகும்.

பிலிப்பைன்ஸ் சுற்­று­லாத்­துறை அதி­காரி அய்லீன் சிந்­தியா அமுரோ இது தொடர்­பாக கூறு­கையில், “அவர் இந்த முத்தை எம்­மிடம் கொண்­டு­வந்த போது நாம் பெரும் வியப்­ப­டைந்தோம்.

இந்த முத்தை சர்­வ­தேச ஆப­ரண நிபு­ணர்கள் உறு­திப்­ப­டுத்­து­வதற்காக காத்­தி­ருக்­கிறோம். இந்த முத்தை பிலிப்­பைன்­ஸி­லேயே வைத்­துக்­கொள்ள வேண் டும் என நாம் விரும்­பு­கிறோம்.

இதன்மூலம் இங்கு வரும் உல்­லாசப் பய­ணி­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்கும் என நாம் கரு­து­கிறோம்” என எனத் தெரி­வித்­துள்­ளனர். இதற்­குமுன் உலகின் மிகப்­பெ­ரிய முத்­தாக கரு­தப்­பட்­டது “பேர்ள் ஒவ் அல்லாஹ்” என அழைக்­கப்­படும் முத்­தாகும்.

இதுவும் பலவான் தீவில் 1934 ஆண்டு கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாகும்.  6.4 கிலோ கிராம் எடையுடைய இம்முத்தின் பெறுமதி 3.5 கோடி டொலர் (சுமார் 509  கோடி ரூபா) என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது  இம் முத்து நியூயோர்க்கில் உள்ளது.

 

By

Related Post